தொழிலாளியின் கை மிசினுக்குள் புகுந்து பலியான பரிதாபம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 26 July 2023

தொழிலாளியின் கை மிசினுக்குள் புகுந்து பலியான பரிதாபம்


நூற்பாலையில் பணியாற்றி கொண்டு இருந்த தொழிலாளியின் கை மிசினுக்குள் புகுந்து பலியான பரிதாபம்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கே.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரகாஷ் வயது 22. இவருக்கும் சுமித்ரா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்நிலையில் விஷ்ணு பிரகாஷ் வேடசந்தூர் அருகே உள்ள காக்கா தோப்பூரில் உள்ள ஒரு நூற்பாலையில் இரவு பணியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கை மெஷினுக்குள் சிக்கிக் கொண்டது. அருகில் யாரும் இல்லாததாலும் அவரால் கையை வெளியே எடுக்க முடியாததாலும் கை மிஷினுக்குள் சிறிது சிறிதாக சென்று கசங்கியது. இந்நிலையில் மிஷினின் மீது விழுந்த விஷ்ணுபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து இன்று அதிகாலை அவரைப் பார்த்த மற்ற தொழிலாளர்கள் நூற்பாலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த விஷ்ணு பிரகாஷின் உறவினர்கள் ஏராளமானோர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் கூடினர். அவர்கள் நூற்பாலை நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள  செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad