திண்டுக்கல் மாவட்டம்: பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்: மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து திண்டுக்கல் காமராஜர் சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை முன்வைத்தும் மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தடுக்க தவறிய மணிப்பூரில் ஆளும் பாஜக அரசை வன்மையாக கண்டித்தும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இக்கூட்டத்தில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களும் நடைபெற்றன இக்கூட்டத்தில் காங்கிரஸ்கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment