திண்டுக்கல் மாவட்டத்தில் 23 ரவுடிகள் அதிரடியாக கைது - மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி-கள் கோகுலகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் தலைமையில் ஆய்வாளர் பாஸ்டின் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா, ஜெய்கணேஷ், கார்த்திகேயன், ரவிசங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் 4 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குற்ற பின்னணி உடைய வடக்கு காவல் நிலையத்தில் 1 ரவுடியும், தெற்கு காவல் நிலையத்தில் 11 ரவுடியும், மேற்கு காவல் நிலையத்தில் 1 ரவுடியும், தாலுகா காவல் நிலையத்தில் 2 ரவுடியும், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் 8 ரவுடியும் 23 ரவுடிகளை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வேட்டை தொடரும் என மாவட்ட எஸ் பி பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment