நத்தத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தலா 1 வருட சிறை தண்டனை, தலா ரூ.1000 அபராதம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, காசாம்பட்டியில் கடந்த ஏப்ரல் மாதம் நாடக மேடையில் படுத்திருந்த நபரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை திருடி சென்ற மாணிக்கம்(34), பாவம்(33) ஆகிய 2 பேரை நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி, சார்பு ஆய்வாளர் ஜெய் கணேஷ் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு நத்தம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாணிக்கம் மற்றும் பாவம் ஆகிய 2 பேருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment