திண்டுக்கல் நகர் பகுதிகளில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியதாக 24 பேரிடம் மாநகராட்சி சார்பில் ரூ.26,400 அபராதம் வசூல்.
திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மாநகர் முழுவதும் கட்டடங்கள் குறித்து கணக்கெடுத்து அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டதாக கூறப்பட்ட 24 பேருக்கு தலா ரூபாய் 1100 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதன்படி ரூ.26,400 மாநகராட்சி அதிகாரிகள் அபராதமாக வசூலித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment