திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் சார்பாக, மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசை கலைக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சதீஸ் தலைமையில் மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுமார் 200 பேர் வடமதுரை காந்தி சிலை முன்பு திரண்டனர். அப்போது மணிப்பூர் சம்பவத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல்ட பலாத்காரம் செயவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத மாநில பா.ஜ.க அரசை கண்டித்தும், கண்டன கோஷங்கள் எழுதப்பட்டன.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கண்டன கோசங்களை எழுப்பியவாறு வடமதுரை பேருந்து நிறுத்தத்தில் துவங்கி செங்குறிச்சிசாலை திண்டுக்கல் சாலை வழியாக ஊர்வலமாக நடந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஊராட்சி தலைவர் இராஜாரத்தினம் மகிளா தலைவர் உமாமகேஸ்வரி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள பிரிவு
No comments:
Post a Comment