திண்டுக்கல்மாவட்டம் ஆத்தூர்:போலி ஆவணம் தயாரித்து ஜீவனாம்சம் தர மறுத்த கணவர் உட்பட இருவர் கைது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள சிறுவாஞ்சியூர் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் சரவணன் 45இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் ஏலவாடியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார் இவர் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற இவரது மனைவிக்கு மாதந்தோறும் தரவேண்டிய ஜீவனாம்சத்தை நீதிமன்றம் மூலம் தடை பெற்றுள்ளதாக போலியாக ஆவணம் தயாரித்து மனைவிடம் வழங்கி உள்ளார் இது குறித்து ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2ன் எழுத்தர் அளித்த புகாரின் பெயரில் சரவணனை ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரித்தனர் விசாரணையில் போலி ஆவணம் தயாரித்தது புழல் வாசல் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் தமிழ்ச்செல்வன் என்பது தெரிய வந்தது இதை அடுத்து ஆத்தூர் நகர் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment