திண்டுக்கல்லில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து வரும் மாநகராட்சி பணியாளர்கள்.
திண்டுக்கல் மாநகராட்சி 44-வார்டு பகுதியில் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாக இருப்பதாக மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர் சிங்கராஜ், சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மேட்டுப்பட்டி மற்றும் அசனாத்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த தெருநாய்களை பிடித்தனர் பின்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது .
ஆனால் பிடிக்கப்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment