ஜனவரி முதல் இன்று வரை 58 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து 142 பேர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 19 July 2023

ஜனவரி முதல் இன்று வரை 58 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து 142 பேர் கைது


 திண்டுக்கல் மாவட்டத்தில் ஜனவரி முதல் இன்று வரை 58 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து 142 பேர் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.


திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2023 ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 58 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இவற்றில் ஈடுபட்ட 142 பேரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாவட்டத்தில் 109 கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்குரிய 279 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 120 கஞ்சா குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 14 கஞ்சா குற்றவாளிகள் மீது நீதிமன்றங்கள் நன்னடத்தைக்கான பினைய பத்திரம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் 376 கஞ்சா வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்வருடம் தொடக்கம் முதல் இன்று வரை மட்டும் மாவட்டத்தில் 145 கஞ்சா வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad