திண்டுக்கல் மாவட்டம்: கொடைக்கானல் சுற்றுலா தளமான நட்சத்திர ஏரியில் படகு சவாரி செல்ல பயணிகளுக்கு தற்காலிக தடை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருவதால் மரங்கள் மற்றும் மர கிளைகள் முறிந்து விழுகின்றன மேலும் நட்சத்திர ஏரி பகுதியில் பலத்த காற்று வீசுவதால் அலைகள் அதிகமாக எழும்பி அடிப்பதாலும் படகுகள் அதிகமான அலையின் காரணமாக கவிழ்ந்து விடும் என்ற காரணத்தினாலும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக படகு குளம் தடை விதித்துள்ளது மேலும் வரும் நாட்களில் காற்றின் வேகம் குறையும் பட்சத்தில் மீண்டும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி தொடங்கும் என்றும் அறிவிப்பு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment