திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்.கன்னிவாடி பேரூராட்சி 3வது வார்டு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி: ஆத்தூர் கன்னிவாடி பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் சுமார் 500ம் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் சுமார் 15 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் கட்டப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. இருப்பினும் புதிதாக கட்டப்பட்ட கலிப்பிடகட்டத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததன் காரணமாக கடந்த 10 நாட்களாக பொதுமக்கள்கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரெடியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நேற்று காலை 11 மணியளவில் சாலை மறியல் செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தரும்படி அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்.
No comments:
Post a Comment