திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரின் உடனடி நடவடிக்கை கொடைரோடு அருகே காவலர் முன் கொலைவெறி தாக்குதல் நடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திண்டுக்கல் கொடைரோடு பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் பாரை பூட்டும்போது தகராறு செய்வதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், இரவு ரோந்து பணி காவலர் விரைந்து சென்றார். அப்போது சிவா(27), மாயி என்ற முத்து(22), முகேஷ்(19)ஆகிய 3 பேர் சேர்ந்து போதையில் ராஜு என்பவரை தலையில் அடித்தும், காலால் எட்டி உதைத்தும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் சிவா மாயி என்ற முத்து முகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment