மகன் என்னை எதிர்த்து பேசி விட்டானே என்றல ஆதங்கத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட தந்தை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 8 July 2023

மகன் என்னை எதிர்த்து பேசி விட்டானே என்றல ஆதங்கத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட தந்தை...


மகன் என்னை எதிர்த்து பேசி விட்டானே என்றல ஆதங்கத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட தந்தை


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள காணப்பாடி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா(வயது 43). இவர் தாடிக்கொம்பு அருகே உள்ள தனியார் நூர்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு செல்வி(38) என்ற மனைவியும் 17 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  சுப்பையாவின் மூத்த மகன் படிக்காமல் செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். அதனைக்கண்ட சுப்பையா மகனை கண்டித்துள்ளார். அப்போது மூத்த மகன் சுப்பையாவை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்பையா அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad