குடகனாறு அணையில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்த குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினருடன் தாசில்தார் அமைதி பேச்சு வார்த்தை
07/07/2023 மதியம் ஒரு மணி அளவில திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் குடனாற்றின் குறுக்கே 27 அடி கொள்ளளவு கொண்ட அணை கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த அணையில் 18 அடி தண்ணீர் உள்ளது. நேற்று அணையின் நீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அணை தண்ணீரை திறக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி குடனாறு பாதுகாப்பு சங்கத்தினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பேசிய தாசில்தார் பழைய ஐந்து சட்டர்களை புதுப்பிக்க பதினைந்து கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான தளவாடங்கள் வந்துள்ளது என்றும், இதற்காக அணையில் உள்ள தண்ணீரை வலது மற்றும் இடது வாய்க்காலில் திறந்து விடுவது என்றும், மீதம் உள்ள தண்ணீரை ஆற்றில் திறந்து விடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டர்கள் பழுது பார்த்து முடிந்தவுடன் முழுமையாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டு நேற்று மதியம் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அடுத்து குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும், குடகனாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், உபரி நீரை குளங்களுக்கு விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கூறினர். இதில் குடகனாறு செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் தனசேகர், உதவி பொறியாளர் முருகன், குடனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் பொம்முராஜ், செயற்குழு உறுப்பினர் குப்புசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment