திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல்லில் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் அடியனுாத்தை சேர்ந்த வெங்கடேஷ்-காயத்திரி, பழநியை சேர்ந்த லோகநாதன்-கோமதி என 2 ஜோடிக்கு மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். 4 கிராம் மதிப்பிலான தங்க தாலி, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை, பாத்திரங்கள், மின்சாதன பொருட்கள் வழங்கப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment