திண்டுக்கல் யானைத்தப்பம் அருகே அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி வேண்டி 27 வார்டு மக்கான் தெரு மக்கள் சாலை மறியல்.
திண்டுக்கல் கிழக்கு 27 வது வார்டுக்கு உட்பட்ட மக்கள் தெரு பாறை மேடு பகுதி மக்களுக்கு கடந்த மூன்று மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர பகுதியில் கிடைக்கவில்லை என்றும் தங்களின் அடிப்படை வசதிகளை கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி பலமுறை அப்பகுதி வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரியிடம் முறையிட்டும் எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை என்பதால் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திடீரென்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த நகர் தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் மற்றும் காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தங்கள் குறைகள் உடனடியாக நிபர்த்தனை செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment