வேடசந்தூர் அருகே பூதிபுரத்தில் ஏல சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி 6.5 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூதிபுரத்தில் ஏல சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி 6.5 கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பொன்ராஜ் அவரது மனைவி சுகன்யா ஆகிய 2 பேரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷ்(28) என்பவர் திருவண்ணாமலை பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை சென்று அங்கு பதுங்கி இருந்த தினேஷை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment