பஸ் நிலையம் அருகே குடகனாற்றுக்குள் குப்பைகளில் பற்றி எரிந்த தீ.... கடும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பஸ் நிலையம் அருகே குடகனாறு ஆறு செல்கின்றது. இந்த ஆர்டருக்குள் பல்வேறு தரப்பினர் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதில் திடீரென பற்றிய தீயால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக வேன் ஸ்டாண்டில் இருப்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் தடுமாறி தங்கள் வாகனத்தை ஓட்டி சென்றனர். அடிக்கடி இது போன்று நடைபெறுவதால் ஆற்றுக்குள் குப்பையை கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி
No comments:
Post a Comment