கொடைக்கானல்: பள்ளங்கி கோம்பை பகுதி கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் மழையில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளங்கி வில்பட்டி கோம்பை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள தரை பாலம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் அப்பகுதியை கடக்க மக்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தை உணராமல் கயிறு கட்டி அப்பாலத்தை கடந்து வருகின்றனர் மேலும் அப்பகுதிக்குட்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment