முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
08/07/2023 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் இ.சித்தூர், குளத்துப்பட்டி, நாகையகோட்டை, கோவிலூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதிய சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் கலந்து கொண்டு 10 இடங்களில் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், வேடசந்தூர் ஒன்றிய குழு தலைவர் சௌடீஸ்வரி கோவிந்தன், வேடசந்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வி முருகன், தமிழ்ச்செல்வி ராமச்சந்திரன், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், எரியோடு நகர செயலாளர் சின்னு என்ற செந்தில்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment