திண்டுக்கல் மேற்கு: செல்லாண்டியம்மன் கோயில் தெரு பகுதியில் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று வாலிபர் மிரட்டல்: திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்குடுசாமி மகன் சரவணபிரகாஷ் 21 இவர் மீது போக்சோ வழக்குப்பதிந்து விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கின் சாட்சியாக திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சந்திரன்50 என்பவரை சரவண பிரகாஷ் நீ சாட்சி சொல்ல வரக்கூடாது என்று தனது வீட்டிற்கு வந்து ஜன்னல் கண்ணாடிகளை கல்லை கொண்டு உடைத்து மேலும் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விட்டுச் சென்றதாக சந்திரன் சரவண பிரகாஷ் மீது திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் நகர் மேற்கு காவல் ஆய்வாளர் ராஜசேகரன் சார்பு ஆய்வாளர் மயில்சாமி மற்றும் காவலர்கள் சரவண பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment