புதிய கட்டிடப் பணியினை மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி ஆய்வு.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் கணவாய்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி,கணவாய் பட்டி பகுதிகளில் மத்திய அரசின் 15-வது மாநில நிதி குழு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் கணவாய்ப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டிடப் பணியினை மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி ஆய்வு செய்தார். இதில் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் கலாவதி, சாணார்பட்டி ஒன்றிய உதவி பொறியாளர் ஜான் பிரிட்டோ, கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாச்சான், ஊராட்சி செயலாளர் வெற்றி வேந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment