கோழி இறைச்சி கழிவுகளை சாலையில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் நூதனப் போராட்டம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 3 July 2023

கோழி இறைச்சி கழிவுகளை சாலையில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் நூதனப் போராட்டம்


கோழி இறைச்சி கழிவுகளை சாலையில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் நூதனப் போராட்டம்


03/07/2023 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஏராளமான கோழி இறைச்சி கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மீதமாகும் குடல்கள், தலை, கால் போன்றவற்றை கடை உரிமையாளர்கள் மாரம்பாடி ரோட்டில் உள்ள குப்பை கிடங்கின் அருகே ரோட்டில் கொட்டி விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனை உண்ணும் நாய்கள் வெறி பிடித்து ஆடு மாடுகளை கடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அடுத்து இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் கோழியின் தலை கால்களை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு அம்பேத்கர் சிலையிலிருந்து கோஷமிட்டவாரு சாலை தெருவில் உள்ள பேரூராட்சி அலுவலகம் வரை நடந்து சென்று மனு அளித்தார். மனுவில் பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை ரோட்டில் கொட்டும் கோழிக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேடசந்தூர் பகுதி முழுவதும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில இளைஞரணி செயலாளர் மோகன், வடமதுரை ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேஷ், ஒன்றிய தலைவர் ஐயப்பன், செயலாளர் ஜீவா, நகரத் தலைவர் மலைச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ் குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் 


தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad