திண்டுக்கல் மாநகர இளைஞரணி மாணவரணி பகுதி கழக பொறுப்பாளர் விண்ணப்பத்தை அமைச்சர் வழங்கினார்.
திண்டுக்கல் மாநகர இளைஞரணி, மாணவரணி பகுதி கழக பொறுப்பாளர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பத்தை நேற்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசனிடம் வழங்கினார். உடன்
மாநகரச் செயலாளர் ராஜப்பா, மாநகரப் பொருளாளர் சரவணன், துணை அமைப்பாளர் பார்த்தசாரதி, மாநகர மாணவரணி அமைப்பாளர் ஜெயக்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ரகுமான், இளைஞர் அணி பகுதி அமைப்பாளர்கள் நாகேந்திரன், காளீஸ்வரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை முழுமையாக நிரப்பி
விண்ணப்பத்துடன் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழிலை இணைத்து வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment