திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 9 இடங்களில் ரூ.84.26 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடைகளை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 9 இடங்களில் ரூ.84.26 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடைகளை உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். அதன்படி, ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சொசைட்டி காலனி, காந்தி நகர், திடீர் நகர், விநோபா நகர், சாஸ்தா நகர், நல்லாக்கவுண்டன் நகர், தும்மிச்சம்பட்டிபுதுார்-கஸ்துாரி நகர், தும்மிச்சம்பட்டி வடக்கு, ஏபிபி நகர்-சத்தியாநகர் ஆகிய 9 இடங்களில் ரூ.84.26 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் சக்திவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment