திண்டுக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 297 மனுக்களை ஆட்சியர் பெற்றார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 297 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பெற்றுக்கொண்டார். இதையடுத்து
கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 11, 12ஆம் வகுப்பு, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை காசோலைகளாக வழங்கப்பட்டன. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் – இணை மானிய கடனுதவித் திட்டத்தில் குஜிலியம்பாறை வட்டத்தைச் சேர்ந்த 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3.80 இலட்சம் மதிப்பிலான மானிய தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா, மகளிர் திட்ட இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment