மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம், புங்கம்பாடி பகுதி ஊர் பெரியதானக்காரர் சுரேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்:-எங்கள் ஊர் அருகில் உள்ள டி. பஞ்சப்பட்டி கிராமத்தில் உள்ளது புதுக்குளம். இக்குளம் தான் ஊருக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாகவும் உள்ளது. மேலும் 14 குளங்களுக்கு இந்த குளத்தில் இருந்து தான் மழை நீர் சென்று நிரம்பும். ஆனால் இந்த குளத்தில் இருந்து மழை நீர் வரும் வரத்து வாய்க்கால், ஆற்றங்கரை மற்றும் வண்டி பாதை ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மணலை திருடி வருகின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்ட போது எங்களை கொலை மிரட்டல் விடுகின்றனர். அதனால் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment