திண்டுக்கல் மேற்கு சிறுமலை மலைப்பாதையில் சுற்றித்திரிந்த காட்டெருமை பதறி அடித்து ஓடிய சுற்றுலா வாசிகள்...
திண்டுக்கல்லில் கொடைக்கானல் மலை சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒரு இடம் பிடித்துள்ளது அதேபோல் திண்டுக்களின் குட்டி கொடைக்கானல் என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மேற்கு சிறுமலையும் ஒரு முக்கியமான சுற்றுலா தளமாக உள்ளது வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நேற்று(2:7:23) அதிகமான சுற்றுலா பயணிகள் சிறுமலைக்கு வருவது உண்டு அப்படி சுற்றிப் பார்க்கச் சென்றவர்களின் கண்ணில் காட்டெருமை தென்பட்டது உடனே பயணிகள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் சிறுமலை 14 ஆவது கொண்டை ஊசி வளைவில் சுமார் அரை மணி நேரம் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக காட்டெருமை சுற்றித்திரிந்தது சிறிது தூரம் சென்று வனப்பகுதிக்குள் காட்டெருமை மறைந்தது மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார்கள் சுற்றுலா வாசிகள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment