பேருந்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 2 July 2023

பேருந்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


பேருந்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


03/07/2023 காலை 9 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் நத்தப்பட்டி ஊராட்சி குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் அகல்யா (வயது 19). இவர் கடந்த 18.09.2014 -ம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆர்.கோம்பை செல்லும் அரசு பஸ்ஸில் சென்றுள்ளார். பஸ் கன்னிமார்புரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தில் இருந்து திடீரென கீழே விழுந்த அகல்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அகல்யா கல்லூரி படிப்பை படிக்க முடியாமல் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார். அகல்யா தனக்கு இழப்பீடு கேட்டு வேடசந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் 2019 ஆம் ஆண்டு அகல்யாவுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேடசந்தூர் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தொகையை போக்குவரத்து கழகத்தினர் செலுத்த தவறியதால் சார்பு நீதிபதி சரவணகுமார் பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நின்று இருந்த பழனி செல்லும் வேடசந்தூர் டெப்போவுக்கு சொந்தமான அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் செல்லச்சாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோர் ஜப்தி செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad