ராகுல் காந்தி தீர்ப்பை எதிர்த்து திண்டுக்கல்லில் காங்கிரசார் மறியல் ஈடுபட்டனர். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 7 July 2023

ராகுல் காந்தி தீர்ப்பை எதிர்த்து திண்டுக்கல்லில் காங்கிரசார் மறியல் ஈடுபட்டனர்.


 ராகுல் காந்தி தீர்ப்பை எதிர்த்து திண்டுக்கல்லில் காங்கிரசார் மறியல் ஈடுபட்டனர்.


ராகுல் காந்தி  வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, 

ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து எம்ஜிஆர் சிலை வரை பேரணியாக வந்து தரையில் அமர்ந்து மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மஹாலில் அடைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சக்காளை, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி,

மாநகர மாவட்ட துணை தலைவர்கள் அப்துல் ரகுமான், அபீபுல்லா, ஷாஜகான், பொதுச்செயலாளர் வேங்கை ராஜா, பகுதி செயலாளர்கள் உதயகுமார், நாகலட்சுமி, பரமசிவம், அப்பாஸ் மந்திரி,  மாநகர மாவட்ட மகிளா தலைவர் ரோஜா பேகம்,  இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad