திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏலம் முறைகேடு- தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்து மதுரை உயர் நீதிமன்றம்.
திண்டுக்கல் மாநகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளதில் முறைகேடு நடந்துள்ளதாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தனபாலன், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஏலம் எடுத்த ஏழு கடையின் உரிமையாளர்கள் நீதிமன்ற தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென இணைப்பு மனு அளித்தனர். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அவர்கள் வழக்கின் விசாரணையில் எங்களையும் சேர்க்கவேண்டும் என்றனர். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் இன்று நேரில் ஆஜராகினார். பிறகு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கடைகளின் இதே நிலை தொடரும் என மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment