ரூ.15 கோடி மதிப்பேட்டில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்த அமைச்சர் அர.சக்கரபாணி.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர் பகுதி லெக்கையன்கோட்டை பிரிவு முதல் குழந்தை வேலப்பர் கோவில் வரை நெடுஞ்சாலையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இயக்கி வைத்தார். இந்நிலையில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் சக்திவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment