எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 2 July 2023

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா...


 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வேடசந்தூர் அருகே எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா - ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் சங்கொண்டான் குளம் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

ஆனால் போதிய மலைப்பொழிவு இல்லாத காரணத்தினால் குளத்தில் தண்ணீர் தேங்கவில்லை இதனால் கடந்த எட்டு ஆண்டுகளாக மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை.

நடப்பாண்டில் அதிக அளவில் மழை பெய்து குளம் நிரம்பியது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மீன் பிடிக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.

தகவல் அறிந்த உசிலம்பட்டி, குடப்பம்,வெல்லம் பட்டி,கெண்டையனூர்,வைரக் கவுண்டனூர், உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிகாலை முதலே சங்கொண்டான் குளத்தில் ஒன்று திரண்டனர்.

ஊர் முக்கியஸ்தர்கள் கன்னிமார் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்பு குளத்து கரை மேல் நின்று வெள்ளை கொடியை  அசைத்ததை அடுத்து  (உத்தரவு) காரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி உபகரணங்கள் உடன் குளத்துக்குள் இறங்கி வலை, ஊத்தா, பரி என பல்வேறு சாதனங்களை கொண்டு ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு கொண்டு விரால், கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர்.

இதையடுத்து மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பிடிக்கப்பட்ட மீன்களை சமைத்து இறைவனுக்குப் படைத்து விட்டு அதன்பின் பொதுமக்கள் சாப்பிடுவர்.

இதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad