வத்தலகுண்டு அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே காமாட்சிபுரம் பகுதியில் தண்ணீர் தேடி வழி தவறி ஊருக்குள் வந்த புள்ளிமான், மயில்சாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வலை மூலமாக புள்ளி மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment