திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது மாமரத்துபட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவருமே சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொருவரும் இரண்டு மூன்று எருமை மாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகராஜ் என்பவரின் பசுமாடு கன்று குட்டியை வெறி நாய் கடித்ததில் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்தது. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென வந்த வெறி நாய்கள் நாகராஜன் கன்றுக்குட்டியையும், செல்வம் என்பவரது பசுமாட்டையும், நடராஜ் என்பவருக்கு சொந்தமான இரண்டு எருமையையும், பழனிச்சாமி என்பவரது எருமையையும், பாலசுப்பிரமணி என்பவரின் எருமை கன்று குட்டியையும் கடித்து குதறி விட்டு ஓடியது.
இதனை அறிந்த விவசாயிகள் தடியுடன் நாய்களை விரட்டி சென்றனர். ஆனாலும் நாய்கள் இவர்களையும் கடிக்க வந்ததால் தாங்கள் தப்பினால் போதும் என்று நாய்களை விட்டு விட்டு திரும்ப வந்து விட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி நாகராஜ் கூறும் பொழுது எங்கள் ஊருக்கு வரும் வழியில் பேரூராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இறைச்சிக் கடை உரிமையாளர்கள் பேரூராட்சி வாகனம் வரும்பொழுது கழிவுகளை கொட்டாமல் மாலை நேரங்களில் கொண்டு வந்து ரோட்டில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஏராளமான நாய்கள் இறைச்சி கழிவுகளை தின்று வெறிபிடித்து உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அதிகமான இறைச்சி கிடைப்பதால் நாய்கள் வேறு பக்கம் செல்வதில்லை. மற்ற நாட்களில் கிராம பகுதிகளில் நுழைந்து எருமை பசு மாடு போன்றவற்றை கடித்து வருகின்றது. எங்களுக்கு இலட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுகின்றது.
இதனால் வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாகம் இறைச்சி கழிவுகளை ரோட்டின் ஓரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதே நிலைமை நீடித்தால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள், முதியவர்கள் என அனைவரையும் கடிக்க ஆரம்பித்து விடும் என்றும் தெரிவித்தார்.
படம் 1வெறி நாய்கள் கடித்து பாதிப்படைந்த எருமையின் புகைப்படம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment