உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் பூங்கொடி துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் சுகாதார துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர், வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் மக்கள் தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு பேரணி தபால் நிலையம், பேருந்து நிலையம் வழியாக சென்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம், ஊரக நலப்பணிகள்(ம) குடும்ப நலம் துணை இயக்குநர் விமலாராணி, துணை இயக்குநர் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment