திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த மேயர் இளமதி.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எம்.காலனி பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் எம்.பி.திட்டத்தின் கீழ் கைப்பந்து மைதானம் கட்டுமான பணி, ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் மாநகராட்சி பூங்காவில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பு பணி, கிணற்றில் தடுப்பு வேலி அமைக்கும் பணி மற்றும் மாநகராட்சி கிணறு தூர் வாரும் பணி ஆகியவற்றை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment