திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் சட்டம் பயிலும் மாணவர்களிடம் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.
திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் மீனா தலைமையில், தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஜிடிஎன் கல்லூரியில் சட்டம் பயிலும் மாணவர்களிடம் சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும், இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment