வேடசந்தூர்எரியோடு அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 32). இவர் தனது உறவினர்களுடன் ஒரு ஆம்னி வேனில் திருநாகேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அனைவரும் திருநாகேஸ்வரத்தில் இருந்து மீண்டும் உசிலம்பட்டிக்கு கிளம்பினர். காரை நாகராஜ் ஓட்டிச் சென்றார். வடமதுரையை அடுத்த கொம்பேறிபட்டி அருகே கார் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் நாகராஜ், பாலாஜி(35), பூபதி(14), நிலா(32), பூஜா(13), பாலையா(44), ஹாசினி(9), பாலம்மாள்(45) உள்ளிட்ட 9 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வடமதுரை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post Top Ad
Sunday, 30 July 2023
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது

Tags
# வேடசந்தூர்

About KST MAHENDRN SUB EDITOR
வேடசந்தூர்
Tags
வேடசந்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment