தமிழ்நாடு நாள் விழா கொண்டாடுதல் முன்னிட்டு
பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ்நாடுநாள்(சூலை-18) விழா கொண்டாடுதல் முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றன.
கட்டுரைப் போட்டியில் திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி ஜே.செபாஸ்டின் அகல்யா முதல் பரிசும், காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி ம. தனபிரியா இரண்டாம் பரிசும், அழகாபுரி அரசு மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி சே. தீபிகா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
பேச்சுப் போட்டியில், சண்முகாபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி 6ஆம் வகுப்பு மாணவி தி.அன்புமதி முதல் பரிசும், வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ச.யுவஸ்ரீ இரண்டாம் பரிசும், சின்னாளப்பட்டி சேரன் வித்யாலாயா மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜோ.ஹெனின்ரித்திகா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment