திண்டுக்கல்லில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் வாஷ் மற்றும் யுனிசெப் நிறுவனம் சார்பில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த முதல்நிலை பயிற்சியாளர்கள் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் நல்ல இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள பயிற்சியாளர்கள் நல்ல முறையில் பயிற்சியை கற்றுக் கொண்டு மக்களுக்கு பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, யுனிசெப் நிறுவனம் (இந்தியா) ஆலோசகர் பர்னாலிகோஷ், தாமேட் இணை நிறுவனர் அபலேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment