நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.2000 அபராதம் - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 11 July 2023

நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.2000 அபராதம் - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.


நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.2000 அபராதம் - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியிடம் கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் ரீதியாக ஆபாசமாக சைகை செய்த குற்றத்திற்காக ராமலிங்கம்(59) என்பவரை நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில், நத்தம் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் நீதிபதி கருணாநிதி,  ராமலிங்கத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad