திண்டுக்கல்லில் வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் ஒருவருக்கு 21 ஆண்டு சிறை, மற்றொருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் திருநகர் பகுதியில் கடந்த 2021 மணிமாறன் என்பவர் வீட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை திருடி, வீட்டை தீவைத்து கொளுத்தியது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நிர்மல்ராஜ் என்ற அனில் குமார், கோபால் என்ற குஞ்சு கோபால் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால், குற்றவாளிகளான நிர்மல்ராஜ் என்ற அனில் குமார் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3000 அபராதமும், கோபால் என்ற குஞ்சு கோபாலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment