தென்னந்தோப்புக்கு நடுவே குவித்து வைக்கப்பட்டு இருந்த தேங்காய் களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
03/07/2023 நள்ளிரவு ஒரு மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சி வள்ளிபட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி ஆசிரியரின் மகள் சாந்தி வயது 40. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 300 தென்னை மரங்கள் நெட்டு வளர்த்து வருகிறார். இந்த மரங்களில் காய்த்து விழும் தேங்காய்கள் அனைத்தையும் கூலியால் மூலம் ஒரே இடத்தில் குவித்து வைத்துள்ளார். இந்நிலையில் இரவில் வந்த மர்ம நபர்கள் காய்ந்து இருந்த தேங்காய் களின் மீது தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததை அறிந்த கூலியால் அருகில் இருந்த தொட்டியில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதுகுறித்து வெளியூரில் இருந்த சாந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து தனது தோட்டத்திற்கு வந்த சாந்தி இதுகுறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குவித்து வைக்கப்பட்டிருந்த 40,000 மதிப்புள்ள தேங்காய் களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment