திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், உதவி ஆட்சியர் பிரியங்கா, துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பாக பற்றிய ஓட்டுநர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.
முன்னதாக திண்டுக்கல் தோமையார்புரம் பைபாஸ் சாலையில் அமைச்சர் வேலுவுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரங்களில் அமைச்சர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment