மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் பூங்கொடி ஆய்வு.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பறையில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வல்லுநர் குழுவினரால் முதல் நிலை பரிசோதனை (First Level Checking) மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பறையில், ஏற்கனவே தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு அறையில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான வாக்குப்பதிவு கருவிகள்(BU) 5633, கட்டுப்பாட்டு கருவிகள்(CU) 3033 மற்றும் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி(VVPAT) 3346 ஆகியவை இருப்பில் உள்ளன. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பறையில் தற்போது இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான வாக்குப்பதிவு கருவிகள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவற்றினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வல்லுநர் குழுவினரால் முதல் நிலை பரிசோதனை (First Level Checking) மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் 10.08.2023-ஆம் தேதி வரை மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பறையில் நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் 40 நபர்கள், 10 டேபிள்கள் அமைக்கப்பட்டு காலை 9.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment