நிலக்கோட்டை மல்லியம் பட்டியில் பத்தி வியாபாரம் செய்து வந்த பெண் மாயம்
திண்டுக்கல்: நிலக்கோட்டை மல்லியம் பட்டியில் பத்தி வியாபாரம் செய்து வந்த கண்பார்வையற்ற பெண் மாயம் ஜூன் 3 மாலை 5 மணி நிலக்கோட்டை மல்லியம் பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் மகன் நாகேந்திரன் இவருடைய மனைவி காளீஸ்வரி வயது 26 இவர் கண் பார்வை அற்றவர் இருப்பினும் இவர் அப்பகுதியில் பத்தி வியாபாரம் செய்து வந்துள்ளார் இவர் காலையில் வியாபாரத்துக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம் நேற்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த கணவர் நாகேந்திரன் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ் அறிவுறுத்தலின்படி சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment