விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்த குடும்பத்தால் பரபரப்பு. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 10 July 2023

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்த குடும்பத்தால் பரபரப்பு.


விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்த குடும்பத்தால் பரபரப்பு. 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே  காச்சகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவர்கள் இப்பகுதியிலேயே கடந்த 75 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். மேலும் 50 வருடங்களாக வீட்டு வரி ரசீதும், 35 வருடங்களாக மின் இணைப்பு பெற்று ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள் என மொத்தம் ஐந்து குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது இடத்திற்கு அருகே உள்ள இடத்தை சக்தி மற்றும் நாகராஜ் ஆகியோர் விலைக்கு வாங்கியதாகவும் வாங்கியவர்கள் நீங்கள் குடியிருக்கும் இடமும் எங்களது இடம்தான் என்று கூறி தொடர்ந்து அடியாட்கள் மூலம் மிரட்டுவதாகவும், லாரிகளை வைத்து மோத வருவதாகவும் மேலும் தனது கணவர் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால், 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த சங்கீதா, போதும் பொண்ணு, காளியம்மாள் உட்பட மூன்று பெண்கள் தங்கள் குழந்தைகளுடன்  விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் பூச்சி மருந்தை ஒளித்து வைத்துக்கொண்டு குடிப்பதற்காக கொண்டு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இருந்த காவல்துறையினர் சோதனை செய்த போது மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை கண்டுபிடித்தனர். பூச்சி மருந்துடன் வந்த பெண்கள் கூறுகையில்:-  நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து எங்களையும் கொலை மிரட்டல் எடுத்து வரும் நபர்கள் மீது காவல்துறை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். ஆகவே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நாங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தோம் என்று கூறினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad