திண்டுக்கல்லில் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை போலீசார் விசாரணை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 10 July 2023

திண்டுக்கல்லில் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை போலீசார் விசாரணை...


திண்டுக்கல்லில் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை போலீசார் விசாரணை.


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது  ஏழுமலையான்நகர். இங்கு வசித்து வருபவர்  கலைச்செல்வி. இவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ரவிச்சந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கலைச்செல்வி கடந்த 7ம் தேதி தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் மாடி வழியாக வந்து வீட்டுகதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 17 பவுன் தங்கநகையை திருடிச் சென்றுள்ளனர். வெளியூர் சென்றிருந்த கலைச்செல்வி இன்று 10.07.23 காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசில் கலைச்செல்வி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது.  பின்னர் மோப்பநாய் மாடிப்படி வழியாக மொட்டை மாடி வரை  சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad