தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 10 July 2023

தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

 


தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை 


திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜ  பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இன்று (ஜூலை-10) தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு  

பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி கோயமுத்தூர், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad